அப்பா என்கிட்ட தவறா நடந்துக்கல- அப்படி சொல்லச் சொன்னதால சொன்னேன்...ஆட்சியரிடம் கெஞ்சும் சிறுமி!
சேலம் வாழப்படியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தன்னிடம் முறை தவறி நடந்துகொண்டார் என கூறியதால் அவரது அப்பா சிறைக்குச் சென்றார். இப்போது அப்பா அப்படி நடந்துகொள்ளவில்லை என ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
சேலம்: சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தந்தை மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெறுகிறேன்; சிறுவர் சீர்திருந்த்தப்பள்ளி நிர்வாகி சொன்னதன் பேரிலேயே தந்தை மீது குற்றம் சுமத்தினேன் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் முருகேசன், கலா தம்பதியினர். இவர்களின் மகள் ஆர்த்தி. சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி தன் தோழிகளுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

ஊட்டியில்...
அவரை பல நாட்கள் தேடி வந்த போலீசார் அவர் ஊட்டியில் இருக்கும் செய்தியை அறிந்து அங்கிருந்து சேலத்துக்கு அழைத்து வந்தனர். பிறகு அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
தவறாக நடந்துகொண்டார்கள்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம் தந்தையும் சித்தப்பா கண்ணனும் தன்னிடம் தவறாக நடந்துகொண்டனர். அதனால்தான் வீட்டை விட்டு வெளியே போனேன் என கூறியுள்ளார்.
சீர்திருத்தப்பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்களே
ஆனால், தற்போது நான் அவ்வாறு கூறவில்லை. அப்பா மீது பாலியல் புகார் கூறினால் தான் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து வெளியே போக முடியும் என அங்கிருந்த நிர்வாகி கூறினார். அதனால்தான் அப்படி கூறினேன்.
என்ன காரணம்?
ஆனால் அப்பாவும் சித்தப்பாவும் எந்த தவறும் செய்யவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் ஆர்த்தி மனு கொடுத்துள்ளார். ஆர்த்தி தந்தை மற்றும் சித்தப்பா மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரின்பேரில் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினர் கட்டாயத்தால் இப்போது பிறழ்ந்து பேசுகிறாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications