பொருத்தம் பார்த்து நிச்சயித்த பெண்.. நகை பணத்துடன் ஓடினார்.. நாகையில் ஷாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பெண் நகை, பணத்துடன் மாயமானதால் அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தைச் சேர்ந்தவர் ரெத்தினசாமி. இவரது மகன் குணசேகரன். இவரது மகள் நித்யா. நித்யாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

Girl missing in Nagappattinam

இவருக்கும் வேதாரண்யத்தில் உள்ள வனதுர்க்கையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த அன்சாரி- சரோஜா ஆகியோரின் மகன் முருகானந்தத்திற்கும் பொருத்தம் பார்த்து நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்றிரவு திடீரென காணவில்லை என கூறப்படுகிறது. இதில் மாப்பிள்ளை வீட்டார் அணிவித்த 2 பவுன் செயின் மற்றும் ரூ.4000 ரொக்கத்தையும் காணவில்லை என்று நித்யாவின் தந்தை குணசேகரன் போலீஸில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து மாயமான புதுப்பெண் நித்யாவை தேடி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A girl in Nagai who was missing with jewel and cash after she was engaged with one guy. Her father filed case.
Please Wait while comments are loading...