மகள் போன்ற பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர சித்தப்பா- கர்ப்பமான பிளஸ் 2 மாணவி!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சொந்த சித்தப்பாவே, மகள் வயது மாணவியைக் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் இருந்த மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி திடீரென மாயமானார்.

போலீசில் புகார்:
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் இது குறித்து கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அழைத்துச் சென்ற சித்தப்பா:
இதில், மாணவி அவரது சித்தப்பா முருகன் என்பவருடன் சென்றிருப்பது தெரிய வந்தது.
ஆவேசமான குடும்பத்தினர்:
இந்தநிலையில் நேற்று முன் தினம் மாணவியுடன் முருகன் ஊருக்கு திரும்பினார். உறவு முறையில் மகளை கடத்தி சென்ற முருகனை கண்டதும் அவரது குடும்பத்தினர் ஆவேசமடைந்தனர்.
ஆசை வார்த்தைகள்:
அப்போது மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். உறவினர்கள் அவரிடம் விசாரித்த போது, முருகன் மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கேரளா அழைத்து சென்றதாக கூறினார்.
பலாத்காரம் செய்த சித்தப்பா:
பால்வெட்டும் தொழிலாளியான முருகன் கேரளாவில் ஒரு ரப்பர் எஸ்டேட்டில் 3 மாதம் அடைத்து வைத்து மாணவியை பலாத்காரம் செய்தாராம். இதனால் கர்ப்பமடைந்ததிருப்பதாக கூறி மாணவி கண்ணீர் விட்டு அழுதார்.
ஏற்றுக் கொள்ளாத மனைவி:
இதைக்கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மாணவியை இந்த நிலைக்கு ஆளாக்கிய முருகனை ஏற்றுக் கொள்ள அவரது மனைவி மறுத்து விட்டார்.
போலீஸ் கைது:
மேலும், முருகன் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாணவியின் தாயார் கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார்.இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications