திராவிட கட்சிகளுக்கு வாக்களித்தது போதும்… பாஜகவிற்கு ஆதரவு தாருங்கள்!: இல. கணேசன்

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சற்று முன் திருச்சி வந்தார். அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை போன்று அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மேடையில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி, இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமர்ந்துள்ளனர்.
மாநாட்டு துவக்கத்தில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் பேசியதாவது:
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. குஜராத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றிய நரேந்திர மோடி இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வார்.
பத்தாண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது. அதை மீட்பதற்கு சரியான தலைவர் நரேந்திரமோடிதான்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்தது போதும். இனி பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார்.
மோடி வருகையை ஒட்டி மாநாடு நடைபெறும் பகுதியில் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், 36 கேமராக்கள் மூலமும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 பாதுகாப்பு மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு கட்ட சோதனைக்கு பிறகே மாநாட்டு அரங்கிற்குள் தொண்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications