வாசன் கட்சியின் பெயர் 'த.மா.தே.கா.': அமாவாசை அன்று துவக்க விழா
சென்னை: ஜி.கே. வாசனின் புதிய கட்சியின் பெயர் தமிழ் மாநில தேசிய காங்கிரஸ். இது குறித்த அறிவிப்பு கட்சி துவக்க விழாவில் வெளியிடப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்ட உடன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன். கட்சியை விட்டு வெளியேறிய அவர் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியை துவங்க முடிவு செய்தார். கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசனை நடந்து வந்தது. இந்நிலையில் கட்சிக்கு தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

கட்சியின் பெயர் திருச்சியில் நடக்கும் கட்சி துவக்க விழாவில் அறிவிக்கப்படுகிறது. அப்பொழுது கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்படும். திருச்சியில் கட்சி துவக்க விழா நடக்கும் என்று வாசன் அறிவித்தார். ஆனால் தேதியை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வரும் 22ம் தேதி அமாவாசை அன்று கட்சி துவக்க விழாவை நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு வாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications