ஜி.கே.வாசன்.. 2 டயருமே பஞ்சர்.. சீமானுக்கு கிடைச்சது கூட வைகோவுக்கு கிடைக்கலையே?
சென்னை: 234 தொகுதிகளிலும் விருப்ப மனு கொடுங்கள் என்று தொண்டர்களை உசுப்பேற்றிவிட்டு ஊர் ஊராக சைக்கிளில் பயணம் கிளம்பி விட்டார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். வலுவான கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராகி வரும் தமாகா, சட்டசபைத் தேர்தலில் தனித்து நின்றால் வெறும் 0.44% மக்கள் ஆதரவு மட்டுமே கிடைக்கும் என்று கூறுகிறது குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பு.
2021ல் ஆட்சியை பிடிப்போம் என்று கூறிய கையோடு இந்த சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகி வரும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு 1.44% பேர் ஆதரவு அளிப்பதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இது வைகோவுக்கு உள்ள செல்வாக்கை விட அதிகம்.

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்டசபைத் தேர்தலில் தனி, தனியாக போட்டியிட்டால் மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதுவும் நாம் தமிழருக்கு கிடைத்த ஆதரவை விட குறைவாகவே உள்ளது.
மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக தனித்து போட்டியிட்டால் 1.35 சதவிகித மக்கள் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தனித்து போட்டியிட்டால் 1.11 சதவிகித மக்கள் வாக்களிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ( இ. கம்யூனிஸ்ட் + மார்க்சிஸ்ட் ) வெறும் 1.21 சதவிகித மக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.
நாம் தமிழர் சீமானுக்கு வாக்களிப்போம் என்று 1.44 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். இது மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட அதிகம் என்பதுதான் ஆச்சரியம்.
ஜி. கே.வாசனின் தமாகாவிற்கு 0.44 சதவிகித மக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.
இதர கட்சியினருக்கு ஆதரவு தருவோம் என்று 2.42 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.
மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சியினரை விடவும், தமாகாவை விடவும் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு சற்று கூடுதலாகவே உள்ளது என்கிறது இந்த கருத்துக்கணிப்பு. இந்த மக்கள் நலக் கூட்டணி தான் மாற்று அரசைத் தரப் போகிறதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications