த.மா.கா. யாருடன் கூட்டணி? அடுத்த வாரம் அறிவிப்பு- ஜி.கே.வாசன்
சென்னை: சட்டசபை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அடுத்த வாரம் அறிவிப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ம் தேதி வாக்குப்பதிவும், மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறது.
மேலும் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நடைபெற இருக்கின்ற தேர்தல் முறையாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்கான நல்ல சூழலை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
தற்போது மாணவர்களுக்கான தேர்வு காலம் என்பதால் அவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்திட வேண்டும்.அதற்கேற்ப தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் தேதி பெரும்பாலான கட்சிகள் எதிர்பார்த்ததை விட 10 நாட்கள் தள்ளி போயிருக்கிறது.
எனவே கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் தங்களின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தேர்தல் அட்டவணைக்கு ஏற்றவாறு ஓரிரு வாரங்கள் கழித்து அறிவிக்கக்கூடும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் கால அவகாசம் இருப்பதால் அதற்கேற்றவாறு மார்ச் 2-வது வாரம் கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications