தடையின்றி மின்சாரம் கொடுங்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு வாசன் கோரிக்கை
சென்னை: தமிழக மக்கள் மின் தட்டுப்பாடு இல்லாமல் வாழவும், தங்களது தொழில் தொடர்ந்து தங்கு, தடையின்றி நடைபெறவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு பல்வேறு மின் திட்டங்களை நிறைவேற்றுவது மத்திய, மாநில அரசின் கடமை. 1998-ல் மத்திய அரசு, தனியார் பங்களிப்புடன், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் 4,000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது. இந்த அனல் மின் நிலையம் மூலம் தமிழகத்திற்கு 1,600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால் செய்யூர் மின் நிலையம் அமைக்கும் பணி ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கின்றது.

மேலும் தமிழ்நாடு மின் வாரியம், தூத்துக்குடி அருகே உடன்குடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது. இத்திட்டம் தொடங்குவதில் காலத்தாமதம் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர், வடசென்னை, தூத்துக்குடி விரிவாக்கம், எண்ணூர் விரிவாக்கம் உட்பட்ட பகுதிகளில் புதிய மின் நிலையம் அமைக்க மின் வாரியம் முடிவு செய்து, அதனை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, அது மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கின்றது.
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மின் வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது என்ற காரணத்தை கூறி மின் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இது தொடர்ந்தால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் சூழல் உருவாகும். தமிழகத்தில் 2013-14 ஆம் ஆண்டில் மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் கூடுதலாகி உள்ளது. கடந்த ஆண்டில் மின் வாரியத்திற்கு 11 சதவீதம் அதிக வருவாய் கிடைத்திருக்கிறது.
நமது மாநிலத்தில் மின் தேவைக்காக வெளி மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. அப்படி வாங்கும் மின்சாரத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
அதன் விளைவாக 2012-13 ஆம் ஆண்டில் பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலை 10.66 சதவீதம், ஆனால் 2013-14ல் அது 18.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்திற்கு 12 சதவீதம் கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது. இதனை சீர்படுத்த சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சாரம் போன்ற மின் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதன் பயனாக மின்சாரத்தை சேமிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
மின் வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுகின்ற போது அதனை தவிர்க்கும் பொருட்டு மின் கசிவு, மின் திருட்டு, நிர்வாக சீர்திருத்தம் போன்ற நடவடிக்கைகளை மின் வாரியம் எடுக்க வேண்டும். 2015 மார்ச் மாதம் முதல் கோடைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தமிழக அரசின் செயல்பாடாக இருக்க வேண்டும்.
எனவே தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மின் திட்டங்களை தமிழக அரசும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து விரைந்து செயல்படுத்த வேண்டும். மேலும் புதியதாக அனுமதி பெற காத்திருக்கும் மின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும்.
மின் பற்றாக்குறை வந்த பின்பு தீர்வு காண்பதைவிட வருவதற்கு முன்பு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மொத்தத்தில் தமிழக மக்கள் மின் தட்டுப்பாடு இல்லாமல் வாழவும், தங்களது தொழில் தொடர்ந்து தங்கு, தடையின்றி நடைபெறவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications