தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர்!- ரஜினிக்கு ஜிகே வாசன் பாராட்டு
சென்னை: தமிழ் கலாச்சாரத்தை தனது சிறந்த நடிப்பால் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் ரஜினிகாந்த் என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார்.
பத்மவிபூஷண் விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ஜிகே வாசன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:
பத்ம விபூஷன் விருது பெற இருக்கும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
திரையுலக சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு நம் நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது கிடைக்கப்பெறுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

நல்ல பண்பாளர், மனித நேயர், எளிமையானவர், எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர்.
தமிழ் திரையுலகில் நடிப்பின் மூலம் தனக்கென்று தனி முத்திரை பதித்து, லட்சக்கணக்கான ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர்.
தன் நடிப்புத் திறமையால் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் நடித்த பெருமையும் அவர்களுக்கு உண்டு.
தமிழ் கலாச்சாரத்தை தனது நடிப்புத் திறமையால் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கும் பெருமைக்குரியவர்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான் போன்ற பல வெளிநாடுகளிலும் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் அவர்.
உலகம் முழுவதும் வாழும் தமிழ் நெஞ்சங்களில் குடி கொண்டிருக்கும் சிறந்த நடிகர்.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்ற சாதனையாளர். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றின் மூலம் தொடர் சாதனைகள் படைத்து திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் எனது சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தங்களது பணி இனிதே தொடர என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications