மாத்தி யோசிங்க.. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள்- ஞானதேசிகன்

கோபிச்செட்டிப்பாளையத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்த நாள் விழாவில் ஞானதேசிகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லையென்றாலும் தன்னலமற்ற தொண்டர்களை கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலமாகவே உள்ளது.
மனதில் பட்டதை பேசக் கூடிய குணம் இளங்கோவனுக்கும் எனக்கும் இருப்பதால் தான் ஒத்துப் போகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடன் கூட்டு சேரும். கூட்டணி அமைக்கும் என பலர் கேட்கிறார்கள். தேர்தலின் போது யாருடன் கூட்டணி? என்பது பற்றி வியூகம் அமைக்கப்படும். அப்போது தான் எந்த கட்சி எங்களுடன் கூட்டணி என்பது தெரியும்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் இளம் தலைவர் ராகுல்காந்தி மிகப்பெரிய சக்தியாக உருவாகி வருகிறார்.
இந்தியா முழுவதும் மக்களுக்கு ராகுல் காந்தி பற்றி நன்கு தெரியும். ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விருப்பம்.
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறை உள்ளது. அந்த நடைமுறையை மாற்றி தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க வேண்டும். இதை நாங்கள் கட்சி மேலிடத்தில் வலியுறுத்துவோம்.
அதேசமயம் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியை யாருக்கு தெரியும். அவரது மாநிலமான அவர் ஆட்சி நடத்துகிற குஜராத் மாநிலத்தில் மட்டும்தான் மோடியை தெரியும்.
இந்தியா முழுவதும் அவர் சென்று வருவதால் பிரதமர் ஆகிவிடலாம் என நினைக்கிறார். இது மோடியின் பகல் கனவாகத் தான் இருக்கும். அவர் பிரதமர் ஆக முடியாது என்றார் அவர்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications