வைரமுத்துவை கடவுள் பார்த்துக் கொள்வார்- எஸ்.வி.சேகர்
வைரமுத்துவை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
சென்னை: வைரமுத்துவை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைரமுத்து, ஆண்டாள் நாச்சியார் குறித்து பாராட்டத்தக்க கருத்துகளை பேசி வந்தார். அப்போது வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் அவரது நூலில் ஆண்டாள் குறித்து கூறியுள்ளதை வைரமுத்து மேற்கோள்காட்டினார்.
அந்த வார்த்தை ஆரம்ப காலத்தில் நல் அர்த்தத்தை கொடுப்பதாக இருந்த போதிலும் தற்போது அது தவறான அர்த்தத்ததை குறிக்கிறது. இதனால் வைரமுத்து ஆண்டாளை அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததன.

வருத்தம் தெரிவித்தும்
அவர் விளக்கம் கூறியும், வருத்தம் தெரிவித்தும் இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். ஏற்கெனவே வைரமுத்துவுக்கு கெடு விதித்து விட்டு உண்ணாவிரதத்தை கைவிட்ட நிலையில், ஜீயர் மறுபடியும் போராட்டத்தை தொடங்கி பிப்ரவரி 3-க்குள் வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

கைவிட கோரிக்கை
இந்த நிலையில் வைரமுத்து இதுவரை மன்னிப்பு கேட்காததால் பக்தர்களுடன் கலந்து ஆலோசித்த ஜீயர், நேற்று முதல் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று எஸ்.வி.சேகர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்.வி.சேகர் சந்திப்பு
எச்.ராஜா இன்று நேரில் சந்தித்து ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் ஜீயரை நேரில் சந்தித்தவுடன் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இத்தனை பேர் மனம் நோகும் நிலையில் வருத்தம் தெரிவிப்பதை விட மன்னிப்பு கேட்பதே மேல்.

ஆண்டாள் உணர்த்துவார்
மன்னிப்பு கேட்பதால் வைரமுத்துவின் உயரம் குறைந்துவிடுமா என்ன? இது வைரமுத்துவின் அசட்டு துணிச்சல். அவர் உணரவேண்டிய விஷயங்களை ஆண்டாள் உணர்த்துவார். வைரமுத்துவை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications