பள்ளி மாணவியின் கையைப் பிடித்து இழுத்த சாமியார்... தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்
கோவை: கோவையில் பள்ளி மாணவியின் கையைப் பிடித்து இழுத்த சாமியாருக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கணுவாய் பகுதியில் பெரியகாண்டியம்மன் கோயில் உள்ளது. மகாளய அமாவசையை முன்னிட்டு நேற்று அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதற்காக, பல பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட சாமியார்கள் அங்கு வந்திருந்தனர்.

பூஜைகள் முடிந்து சாமியார்கள் இன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கணுவாய் அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்த 10 வயது பள்ளிச் சிறுமியின் கையைப் பிடித்து சாமியார் ஒருவர் ரகளை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பயத்தில் அலறியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்தச் சாமியாரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமியாரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ராஜபாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம் (எ) மருகுசாமி (50) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications