அதே வேடலில் பிரேமலதாவுக்குப் "பதிலடி".. தயாராகிறது அதிமுக!
சென்னை: காஞ்சிபுரம் அருகே வேடலில் நடந்த தேமுதிக திருப்புமுனை (அது என்ன திருப்புமுனையோ) மாநாட்டின்போது பிரேமலதா விஜயகாந்த், மிகக் கடுமையாக ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசியதற்குப் பதிலடியாக அதிமுக சார்பில் அதே வேடலில் ஒரு மகளிர் மாநாடு நடைபெறப்போகிறதாம். அந்த மாநாட்டில் பிரேமலதாவை வார்த்தைகளால் துவைத்தெடுக்க அதிமுகவினர் தயாராகி வருகின்றனராம்.
முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கேவலமாக தனிப்பட்ட முறையில் பிரேமலதா படு கோபாவேசமாக கொச்சையாகப் பேசிய செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஒரு கட்டத்தில் தான் பேசுவது மிகவும் அசிங்கமாகப் போவதை உணர்ந்து பிரேமலதாவை அந்தப் பேச்சை நிறுத்தி விட்டு வேறு பேச்சுக்கு் தாவும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது பிரேமலதாவுக்குப் பதிலடி கொடுக்க அதிமுக மகளிர் அணி தயாராகி வருகிறதாம். அதே வேடலில் வைத்து பிரேமலதாவை வார்த்தைகளால் துவைத்தெடுக்கப் போகிறார்களாம் அதிமுகவினர்.
மாநில மகளிர் அணிச் செயலாளரும், அமைச்சருமான கோகுல இந்திரா தலைமையில் இதற்கான ஏற்பாடுளகள் நடந்து வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்த மகளிர் அணி மாநாடு மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளதாம். இந்த மாநாட்டில் கோகுல இந்திராதான் முக்கியமாகப் பேசவுள்ளாராம். பிரேமலதாவை மட்டும் குறி வைத்து கடுமையாகப் பேசவிருக்கிறார் கோகுல இந்திரா என்று கூறுகிறார்கள்.
முன்னதாக நடிகை விந்தியாவைத்தான் பேச வைக்கத் திட்டமிட்டனராம். ஆனால் அவர் சில பல காரணங்களைச் சொல்லி நழுவி விட்டதாக சொல்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. இதையடுத்தே கோகுல இந்திராவைக் களம் இறக்கியுள்ளனராம். அவரும் மிகவும் சந்தோஷமாக இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாராம்.
தேமுதிகவின் பிரேமலதா பேச்சுக்கு அதிமுகவின் கோகுல இந்திரா கொடுக்கப் போகும் பதிலடி என்னவாக, எப்படி இருக்கும்.. என்பதை அறிய அதிமுகவினர் காதுகளை தீட்டி வைத்துக் கொண்டு திட்டு மழையைப் பார்க்க தயாராகி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications