சென்னை ஏர்போர்ட்டில் மீண்டும் தங்கம் பறிமுதல் - மதிப்பு 43 லட்சம் ரூபாய்!
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூபாய் 43 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று நேற்று இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பெரம்பூர் ஜானகிராமன் தெருவை சேர்ந்த அக்பர் என்பவரும் அதே விமானத்தில் வந்தார். அவரது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் கைப்பையில் மறைத்து வைத்து 800 கிராம் தங்க கட்டிகளை கருப்பு பெயிண்ட் அடித்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 24 லட்சம் ஆகும். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடந்த சோதனையின் போது ராஜசேகர் என்பவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 550 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 19 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications