இது தங்க ஹெல்மெட்!… கோவை நகைப்பட்டறை தொழிலாளி சாதனை
கோவை: வடச்சட்டி ஹெல்மெட், மண்சட்டி ஹெல்மெட்தானே பார்த்திருப்பீர்கள்... தங்கத்தில் மைக்ரோ ஹெல்மெட் தயாரித்து அசத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி. இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதனை தயாரித்துள்ளார்.
கோவை, செட்டி வீதி, அசோக் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். நகை பட்டறை தொழிலாளியான இவர், மைக்ரோ அளவில் நகைகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர். இவர் தமிழக அரசு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தற்போது மைக்ரோ அளவில் ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளார் மாரியப்பன். 250 மில்லி கிராமில் (கால் கிராம்) ஹெல்மெட் தயாரித்துள்ள இவர், அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வுக்காக இதை வடிவமைத்துள்ளதாக கூறுகிறார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிர்க்கு பேட்டியளித்துள்ள மாரியப்பன், "மைக்ரோ அளவில் நகைகள் வடிவமைப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். அதன் காரணமாக அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். அனைவரும் தரமான ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இதை வடிவமைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
இது போன்ற மைக்ரோ அளவிலான வடிவமைப்புகளை அதிகபட்சம் ஒரே நாளில் தயாரித்து விடுவேன் என்று மாரியப்பன் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே 4 முறை மைக்ரோ ஹெல்மெட் தயாரிக்க முயன்று, 5வது முறை இந்த ஹெல்மெட்டை மாரியப்பன் தயாரித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது 100 மில்லி கிராமில் உலக கோப்பையின் மாதிரியையும், கோவை கோணியம்மன் கோவில் திருவிழாவின் போது 2 கிராம் தங்கத்தில் கோணியம்மன் கோவில் தேர் மாதிரியையும், சி.எஸ்.ஐ. சர்ச் நூற்றாண்டு விழாவின்போது 5 கிராமில் சர்ச் மாதிரியையும் மைக்ரோ அளவில் வடிவமைத்து சாதனை படைத்துள்ளார் மாரியப்பன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications