ஆத்தாடி.. இவ்வளவு நடந்தும் தினகரனுக்கு இம்புட்டு கூட்டமா??????
Recommended Video

சென்னை: அதிமுக உடைந்து, பிளந்து, பின்னர் இணைந்து... என்னென்னவோ நடந்து போச்சு, ஜெயலலிதா இறந்த இந்த ஒரு வருடத்திற்குள். தற்போது சசிகலா குடும்பம் ஒதுக்கி ஓரம் கட்டப்பட்டு விட்டது. ஆனால் ஆர்.கே.நகரில் இன்று தினகரனுக்கு கூடிய கூட்டம், அடடா இன்னுமாப்பா இவர்களை நம்ப இத்தனை பேர் உள்ளனர் என்ற ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.
முதல்வர் ஈபிஎஸ் - துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கே கட்சி, கொடி,சின்னம் எல்லாம் என்று தேர்தல் ஆணையமே அதிரடியாக (??) கூறி விட்டது. தினகரன் இப்போது ஒரு சுயேச்சைதான். அவருக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது.
ஆனால் ஆர்.கே.நகரில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது கூடிய கூட்டம், கொடுக்கப்பட்ட வரவேற்பு ஆகியவற்றைப் பார்த்தபோது, அடேங்கப்பா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

பெரிய கூட்டமப்பா
இன்று ஆர்.கே.நகரில் தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் பெரும் கூட்டம் கூடவே வந்தது. வழியெங்கும் கூடி நின்று வரவேற்றனர் அவரது ஆதரவாளர்கள்.

மரத்தடியில் இலையுடன் பெண்கள்
அதிலும் ஒரு மகளிர் படை கையில் இலையுடன் (அதாவது அவுகளுக்குத்தான் இரட்டை இலை சொந்தமாம்) தினகரனுக்கு கூடி நின்று வரவேற்பு அளித்து தியாகத் தலைவி சின்னம்மாவின் வேட்பாளர் தினகரன் என்று முழக்கமிட்டது பார்க்க வித்தியாசமாக இருந்தது.

அடேங்கப்பா கூட்டம்
தினகரனிடம் கட்சி கிடையாது, கொடியும் கிடையாது, சின்னமும் கிடையாது. ஆனாலும் எப்படி இப்படி ஒரு கூட்டம் என்றுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் இது தினகரனுக்காக கூடிய கூட்டம் அல்ல என்பதும் உண்மையானது.

வேல் வேல் வெற்றிவேல்
இது நிச்சயம் வெற்றிவேல் ஏற்பாடு செய்த கூட்டம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். தினகரனிடம் இருக்கும் பண பலத்தால் இந்தக் கூட்டம் சாத்தியமானதும் கூட. அதேசமயம், இப்பவும் கூட இவர்களுக்கு இத்தனை பேர் வருகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானது.
தேர்தல் ஆணையத்திடம் அடி வாங்கிய தினகரனுக்கே இம்புட்டு கூட்டம்னா.. அடி கொடுத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்ஸுக்கெல்லாம் எம்புட்டு கூடப் போகுதோ!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications