Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வண்டலூர் ஜூ போறீங்களா? அறிமுகமாகும் சூப்பர் திட்டம்.. 2 வருட காத்திருப்புக்கு விரைவில் புல்ஸ்டாப்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'சிங்கம் சபாரி' விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சிங்கங்களை நேரடியாக ஜீப் மூலம் சென்று பொதுமக்கள் பார்க்க முடியும். நீண்ட காலமாக வண்டலூர் பூங்காவில் சிங்கத்தை பார்க்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை தந்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய வனஉயிரில் பூங்காக்களில் ஒன்றாகும். 1855-ல் தொடங்கப்பட்ட இந்தியாவின் பழமையான வனஉயிரில் பூங்காவான வண்டலூரில், 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பலஆயிரக்கணக்கான தாவரங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான், ஒட்டகசிவிங்கி, பாம்புகள், சிறுத்தை, முதலை, ஆமைகள், அபூர்வமான குரங்குகள் உள்பட ஏராளமான வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

good news for this summer : The lion Safari is starting again soon at Vandalur Zoo

கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நீலா, பத்மநாபன் ஆகிய சிங்கங்கள் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தன. இதன் தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 3 சிங்கங்கள் உயிரிழந்தன. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் அருங்காட்சியகம், இரவு நேர விலங்குகள் இல்லம், உள்ளிட்ட 7 முக்கிய விலங்குகளின் இருப்பிடங்கள் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவற்றை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

எனினும் மூடப்பட்டிருந்த சிறுவர் பூங்கா, பாம்புகள் இல்லம், உட்சென்று காணும் பறவைகள் கூடம், இரவு நேர விலங்குகள் இல்லம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் அருங்காட்சியகம் ஆகியவை படிப்படியாக பார்வையாளர்கள் பார்ப்பதற்காக திறக்கப்பட்டது.

ஆனால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் பேட்டரி வாகனம் மூலம் சென்று நேரடியாக சிங்கங்கள் உலாவுவதை பார்க்கும் 'சிங்கம் சபாரி'(லயன் சபாரி) திட்டம் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் தினமும் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் மீண்டும் 'சிங்கம் சபாரி' திட்டத்தை தொடங்கவேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து பூங்கா நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தாரக்ள். இதனால் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்த பிறகு 'சிங்கம் சபாரி' திட்டத்தை தொடங்குவதற்கு பூங்கா நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

இதன்படி சமீபத்தில் விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் லக்னோ மற்றும் கர்நாடகாவில் உள்ள பூங்காவில் இருந்து 2 சிங்கங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டன. இதனால் இந்த பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 10-ஆக உயர்ந்துள்ளது.

good news for this summer : The lion Safari is starting again soon at Vandalur Zoo

மீண்டும் வண்டலூர் பூங்காவில் 'சிங்கம் சபாரி' திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட 'சிங்கம் சபாரி' திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக மூடப்பட்ட 'சிங்கம் சபாரி' பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புக்கம்பி வேலிகள் நல்ல உறுதித்தன்மையோடு இருப்பதற்காக பல்வேறு சீரமைப்புப்பணிகள் நடந்தது.

அதன் இருப்பிடங்களில் சில சிங்கங்கள் விடப்பட்டு, பேட்டரி வாகனத்தில் சென்று நேரடியாக அவற்றை பார்ப்பது போல் சோதனை ஓட்டங்கள் நடைபெற போகிறது. சிங்கத்தின் உலாவிடங்களுக்கு நேரடியாக பொதுமக்கள் சென்று பார்ப்பதற்காக புதிய பேட்டரி வாகனங்கள் வாங்குவதற்கு பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் பார்க்க 'சிங்கம் சபாரி' திட்டம் மிக விரைவில் தொடங்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+