அட இது நல்லாருக்கே.. டைனேசருக்கு பிறந்தநாள் கொண்டாடிய கூகுள்!
கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரில் உள்ள டைனேசருக்கு பிறந்த நாள் கொண்டாடி உள்ளது.
சென்னை: கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரில் உள்ள டைனேசருக்கு பிறந்த நாள் கொண்டாடி உள்ளது.
ஒரு காலத்தில் பிரவுசர் என்றால் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமே இருந்தது. அதன்பின் மொஸில்லாபயர் பாக்ஸ் பிரவுசர் வந்தது.
ஆனால் இதற்கு போட்டியாக வந்த குரோம் பிரவுசர் 5 வருடங்களில் உலகின் முன்னணி பிரவுசராக மாறியது. தற்போது குரோம்தான் உலகின் நம்பர் ஒன்னாக உள்ளது.

என்ன டைனேசர்
கூகுள் குரோம் பிரவுசரில், நாம் இணையம் இல்லாத போது சர்ச் செய்தால் "404 நாட் பவுண்ட்" என்று பதில் வரும். அதே சமயத்தில் ஸ்கிரீனில் டைனேசர் ஒன்றும் தோன்றும். அதில் நாம் இணையம் மீண்டும் வரும் வரை ஜாலியாக கவலை மறந்து விளையாடலாம். இந்த டைனேசர் விளையாட்டு உலகம் முழுக்க பிரபலம்.

டைனேசருக்கு பிறந்தநாள் கொண்டாடியது
இந்த நிலையில்தான் கடந்த வாரம், இந்த டைனேசர் வேகமாக செல்லும் போதே, அது பிறந்த நாள் கேக் ஒன்றை பிடிப்பது போல விளையாட்டில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இந்த கேக்கை பிடித்தால், அந்த டைனேசருக்கு தொப்பி ஒன்று அணிவிக்கப்படும். அந்த டைனேசருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்காக இப்படி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
|
ஏன் தெரியுமா
கடந்த செப்டம்பர் 2ம் தேதிதான் குரோம் பிரவுசர் பிறந்த நாள் கொண்டாடியது. இது குரோம் பிரவுசரின் 10 வது பிறந்தநாள் ஆகும். கூகுள் குரோம் பிரவுசர் கடந்த 2008ல் தொடங்கப்பட்டது. இதனால் அதே நாளில் அந்த விளையாட்டில் இருக்கும் டைனேசருக்கும் பிறந்த நாள் விழா கொண்டாடி இருக்கிறார்கள்.
|
கூகுள் வைத்த சேலஞ்ச்
இதை முன்னோட்டமாக வைத்து , குரோம் பிரவுசரில் இந்த விளையாட்டை விளையாட சொல்லி கூகுள் நிறுவனம் போட்டி வைத்துள்ளது. பரிசா டாப்ரிஸ் என்ற பிரபலம் எடுத்திருக்கும் மதிப்பை விட அதிக மதிப்பு எடுக்க முடியுமா என்று சேலஞ்ச் செய்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications