யோகா செய்யும் கூகுள் எழுத்துக்கள் - யோகா குரு பிகேஎஸ் ஐயங்காரின் பிறந்தநாளுக்கு டூடுள்!
சென்னை: யோகக் கலையை உலகம் முழுவதும் பரப்பிய பிரபல யோகா குருவான பி.கே.எஸ் ஐயங்காரின் பிறந்தநாளை டூடுள் போட்டு கொண்டாடி வருகின்றது கூகுள்.
கிருஷ்ணமாச்சாரியாவின் பேர் சொல்லும் சீடராக விளங்கிய பி.கே.எஸ்.ஐயங்கார் என்னும் பெல்லூர் கிருஷ்ணமாச்சார் சுந்தரராஜ ஐயங்கார் இந்திய யோகக் கலையின் அருமையை உலகம் முழுவதும் வெளிப் படுத்தியவர்.
உலகின் பல பகுதிகளிலும் அவரது பெயரில் யோகா கற்பிக்கும் மையங்கள் உருவாகி, யோகக் கலையைப் பரப்பிவருகின்றன.

11வது குழந்தை:
பிகேஎஸ் தன் பெற்றோருக்குப் பிறந்த 13 குழந்தைகளில் 11வதாகப் பிறந்தார். குடும்பத்தை வறுமை வாட்டியது. அவரது ஊரில் கடும் நோய்த் தொற்று பரவியதால் சிறு வயதில் அவருக்கு ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. கை, கால்கள் இயல்புக்கு மீறி மெலிந்திருந்தன.

பலமாக்கிய யோகா:
அவருக்கு 5 வயதானபோது, குடும்பம் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தது. பிகேஎஸ் ஐயங்காரின் நெருங்கிய உறவினரான கிருஷ்ணமாச்சாரியா, அப் போது மைசூர் சமஸ்தானத்தில் யோக குருவாக இருந்தார். அவர் பிகேஎஸ் ஐயங்காரை மைசூருக்கு அழைத்துச் சென்று யோகக் கலையை கற்றுக்கொடுத்தார். யோகம் பயிலும்போதே, பலவீனமான தன் உடல் பலமாவதை உணர்ந்தார்.

யோகம் பரப்பிய ஆசான்:
குருவின் ஆணைப்படி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் யோகக் கலைப் பயிற்சி மையத்தை 18 வயதில் தொடங்கினார். பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கான விளக் கங்கள், யோகக் கலையின் மேன்மை, யோகாசனத்தின் ஒளி, பிராணாயாமம் ஆகிய தலைப்பு களில் அவர் எழுதிய நூல்கள் சாமானிய மக்களிடமும் யோகக் கலையைக் கொண்டு சேர்த்தன.

அஞ்சல் தலை கவுரவம்:
கிரிக்கெட் வீரர் சச்சின், இந்தி நடிகை கரினா கபூர் என மொத்தம் 4 தலைமுறைக்கு யோகா ஆசிரியராக இருந்த பெருமைக்கு உரியவர் பிகேஎஸ். பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை பெற்றிருக் கிறார். 2004 ஆம் ஆண்டின் செல் வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் பிகேஎஸ் ஐயங்கார் பெயரை பிரபல டைம் இதழ் குறிப்பிட்டது. சீன அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது.

யோகா செய்யும் எழுத்துக்கள்:
இந்நிலையில் அவரது 97வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுளின் ஒவ்வொரு எழுத்தும் அழகாக யோகா செய்யும் ஒரு மனித உருவமாக மாறும் வகையில் அழகாக வடிவமைத்து கவுரவப் படுத்தியுள்ளது கூகுள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications