நீங்க ஆகவே முடியாது.... முடியாது... தலையில் குண்டைப் போட்ட ஜோசியர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர் பதவி நினைப்பில் இருக்கும் வாரிசு தலைவரின் கனவில் பெரிய குண்டை தூக்கி வீசியிருக்கிறார் ஜோசியர். இதனால் உடன்பிறப்பு தரப்பு உற்சாகத்தில் இருக்கிறதாம்.

எப்படியும் சிம்மாசனம் சிக்கிவிடும் என்பதில் வாரிசு தலைவர் உற்சாகமாக குரல் கொடுத்து வருகிறார். அவரை எதிர்ப்பவர்கள் எல்லாம் உங்க கனவு பலிக்காது என ஆரூடம் கூறி வருகின்றனர்.

Gossip on TN Politics

இந்த நிலையில் வாரிசு தலைவரின் அடுப்படி ஆலோசகர் ஆஸ்தான ஜோதிடரைப் பார்த்துள்ளார். வாரிசு தலைவர், அவரது வாரிசு ஆகியோரின் ஜாதகத்தையும் எடுத்துப் போயுள்ளார்.

ஜாதகங்களைப் பார்த்த ஜோதிடர் சொன்ன தகவலால் அடுப்படி ஆலோசகர் அதிர்ந்து போனாராம். வாரிசு தலைவருக்கு அரியாசனம் யோகமே இல்லை என அடித்துச் சொல்லிவிட்டாராம்.

எத்தனை முறை சோழி உருட்டினாலும் குடுமி சிக்கவில்லையே.... அரியாசனம் என்பது கனவாகத்தான் இருக்கும் என திட்டவட்டமாக சொல்கிறதே ஜாதகம் என கைவிரித்துவிட்டாராம்.

அத்துடன் வாரிசு தலைவரின் வாரிசுக்கு கூட அப்படி ஒரு யோகம் இருக்கிறது என இன்னொரு தகவலையும் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். இதனால் ரொம்பவே நொந்து நூலாகிவிட்டாராம் அடுப்படி ஆலோசகர்.

இந்த தகவல் உடன்பிறப்பு வீட்டுக்கும் எட்டியிருக்கிறது. உடன்பிறப்போ உற்சாகமாக கொண்டாடித் தீர்த்தாராம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here the Gossip on the Tamilnadu Politics.
Please Wait while comments are loading...