For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி தலைவர் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த தமிழக 'தலை' !

டெல்லிக்கு சென்ற தமிழக 'தலை' நெடுஞ்சாண் கிடையாக அங்கு 'தலைவர்' காலில் விழுந்ததுதான் கோட்டையில் ஹாட் டாபிக்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: டெல்லி சந்திப்புகளில் தமிழகத்தின் 'தலை' நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து கும்பிட்டு வெளியேறியதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் டெல்லி தலைவரை சந்திக்க சென்ற தமிழக 'தலை' தமது உறவினர் ஒருவரை மட்டும் அழைத்துச் சென்றார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

காலை தொட்டு கும்பிட்டு

காலை தொட்டு கும்பிட்டு

இந்த சந்திப்பின் தொடக்கத்திலேயே பூங்கொத்து கொடுத்து காலை தொட்டு கும்பிட்டுதான் பவ்யமாக அமர்ந்தாராம் 'தலை'. இதில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு தந்துவிடுவோம் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

ஆட்சி கலைப்பீங்களா?

ஆட்சி கலைப்பீங்களா?

அப்போது, ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் ஆட்சியை கலைத்துவிடுவீர்கள் என பத்திரிகைகள் தொடர்ந்து எழுந்துகின்றன.. அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள் சார் எனவும் கெஞ்சியிருக்கிறார் தல. அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் சொத்துகள் பறிமுதல் நிலைமை என்னாச்சு? அரசு வசம் வந்ததா? ஒரு தகவலுமே இல்லை என கூற 'தலை' அதிர்ச்சியாகிப் போனார்.

சொத்து பறிமுதல்

சொத்து பறிமுதல்

அவங்க சொத்துகள் என்பதற்காக அடக்கி வாசிக்காமல் பெங்களூரு கோர்ட் தீர்ப்பு என்னவோ அதை செய்துதான் ஆக வேண்டும் என கறார் காட்டப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஏற்றுக் கொண்ட 'தலை' சந்திப்பு முடிந்து கிளம்பும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு காலை தொட்டு கும்பிட்டுவிட்டு விடைபெற்றிருக்கிறார்.

கோட்டையில் ஹாட் டாபிக்...

கோட்டையில் ஹாட் டாபிக்...

ஆட்சியை தக்க வைக்க ஆட்சியாளர்கள் காலில் 'தலை' விழுந்து விழுந்து எழுந்ததுதான் கோட்டையில் இப்போது ஹாட் டாபிக்காக இருக்கிறது. அதிமுகவினரும் 'பவ்யத்தை' எல்லாம் டெல்லியில் தூக்கி சாப்பிட்டாட்டாரு அண்ணன் என சிலாகிக்கின்றனர்.

English summary
Here the gossip on recent Delhi meetings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X