தொடரும் வதந்திகள்... கடுப்பில் கவுண்டமணி... போலீசில் புகார்!
எத்தனை முறை சொன்னாலும் அடங்காமல் கிளம்பி விடுகிறார்கள் வதந்தி பரப்புவோர்... அதுவும் காமெடி கிங் கவுண்டமணி உடல்நிலை குறித்து.
இந்த ஆண்டு மட்டும் மூன்றாவது முறையாக கவுண்டர் உடல் நிலை குறித்து கண்டபடி சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பிவிட்டார்கள்.

இதைத் தொடர்ந்து அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கவுண்டமணி சார்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கவுண்டமணியின் வழக்குரைஞர் கே.சசிக்குமார், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த மனுவில், "கவுண்டமணி கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக சில நாள்களாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்தத் தகவலைப் பார்த்து கவுண்டமணியின் நண்பர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதனால் கவுண்டமணியும், அவர் குடும்பத்தினரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே காவல்துறை இப்படிப்பட்ட வதந்திகளைத் தடுக்க வேண்டும். மேலும் இந்த வதந்தியை பரப்புவோர் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications