நெல்லையில் ரவுடி ராக்கெட் ராஜாவை விடுவிக்க கோரி அரசு பஸ் எரிப்பு.. பரபரப்பு
ராக்கெட் ராஜாவை விடுவிக்க கோரி வன்முறையில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை: நெல்லையில் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜவை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் அரசு பேருந்து ஒன்றினை எரித்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு தழையூத்துக்கு அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென வழிமறித்தனர். இதனால் ஓட்டுனர் பேருந்தை ஓட்டமுடியாமல் நிறுத்திவிட்டார்.

பேருந்தினுள் அதிரடியாக ஏறிய இரண்டு பேரும், பயணிகளையும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பேருந்தில் இறங்குமாறு கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் பேருந்திலிருந்து கீழே இறங்கினர். இதனைத் தொடர்ந்து மர்மநபர்கள் இரண்டு பேரும் பேருந்துக்கு நெருப்பு கொளுத்தினர்
பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜாவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் பேருந்தில் குபுகுபுவென பற்றி எரிந்த நெருப்பினை அணைத்தனர்.
ஆனால் பேருந்து முழுவதுமாக பற்றி எரிந்து கருகியது. அரசு பேருந்தினை எரித்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். நகரின் பிரதான சாலையில் நடைபெற்ற இந்த பேருந்து எரிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications