களை கட்டும் தீபாவளி பண்டிகை: சொந்த ஊர் போக 2.25 லட்சம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இன்றும் நாளையும் பயணம் செய்ய நேற்று மதியம் நிலவரப்படி இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு 17 ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 9088 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்:

கூடுதல் பேருந்துகள் இயக்கம்:

அதன்படி 17 ஆம் தேதி 501, 18 ஆம் தேதி 501 என கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று 699 எண் கொண்ட பேருந்தும், நாளை 1400 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

டிக்கெட்டுகள் முன்பதிவு:

டிக்கெட்டுகள் முன்பதிவு:

இதற்கான முன்பதிவு கடந்த 17 ஆம் தேதியே துவங்கியது.இந்நிலையில் இன்றும் நாளையும் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

24 மணி நேர பணி:

24 மணி நேர பணி:

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், " கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 400 போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளி வரை 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.

முன்பதிவிற்கு டோக்கன்:

முன்பதிவிற்கு டோக்கன்:

9 நடைமேடைகளையும் கண்காணிக்க ஏற்கனவே 40 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 16 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பு பணியில் போலீசார்:

பாதுகாப்பு பணியில் போலீசார்:

இதில் வண்டியின் நம்பர், புறப்படும் நேரம், எந்த நடைமேடை உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருக்கும்.மேலும் 25 முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2 லட்சத்திற்கு மேல் டிக்கெட்டுகள்:

2 லட்சத்திற்கு மேல் டிக்கெட்டுகள்:

இன்றும் நாளையும் பயணம் செய்வதற்கு இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிசிடிவி கேமராக்கள்:

சிசிடிவி கேமராக்கள்:

போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனி கேபின் அமைத்து சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+