அரசு மருத்துவமனைகளில் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் - அமைச்சர் அதிரடி அறிவிப்பு: வீடியோ
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சனையாக இருக்கிறது. அதுபோல குழந்தையின்மை பிரச்சனையும் ஒரு சவாலாக உருவாகி வருகிறது. அதனால் தற்போது ஆங்காங்கே பல தனியார் கருத்தரிப்பு மையங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் அந்த மையங்களில் ஏழை மக்கள் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு கட்டணம் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 6 தலைமை அரசு மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் இந்த ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மையங்களில் மகளிர் சிறப்பு மருத்துவர், உடலியல் மருத்துவர் மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை மருத்துவர் என சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு இருக்கும் என கூறியுள்ளார்.
அமைச்சர் கூறியது போல, இந்த மையங்கள் உடனே ஆரம்பிக்கப்பட்டால் பல ஏழை மக்கள் சிகிச்சை பெற்று குழந்தைப் பேறு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications