மீலாது நபி: அரசு விடுமுறை 24-க்கு மாற்றம்; வங்கிகள் 4 நாள்கள் செயல்படாது
சென்னை: மீலாது நபி டிசம்பர் 24-ஆம் தேதி வருவதையொட்டி, அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது என்று தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மீலாது நபி:
மிலாது நபியை ஒட்டி, அரசு விடுமுறை டிசம்பர் 23-ஆம் தேதி விடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கணக்கிடக் கூடிய பிறையானது டிச. 12-ஆம் தேதி தெரிந்தது. இதில் இருந்து 12-வது நாளான 24-ஆம் தேதியே மீலாது நபி கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அரசு தலைமை காஜி சலாலுதீன் முகமது அயூப் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, அரசு விடுமுறை 24-ஆம் தேதிக்கு (வியாழன்) மாற்றி உத்தரவிட்டுள்ளது என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

4 நாள்கள் தொடர் விடுமுறை:
டிசம்பர் 24-ஆம் தேதி விடுமுறை என்பதால், அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸும், 26, 27 ஆகிய நாள்கள் சனி, ஞாயிறு என்பதால் மொத்தம் 4 நாள்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.
வங்கிகளுக்கும் விடுமுறை:
ஒவ்வொரு மாதமும் 2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். மேலும், அரசு விடுமுறை வங்கிகளுக்கும் பொருந்தும். எனவே, வங்கிகளுக்கும் 4 நாள்கள் விடுமுறை விடப்படுகிறது. ஆகவே, இந்த வாரமே வங்கிகள், ஏ.டி.எம்.-களில் இருந்து தேவையான பணத்தை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications