சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை செல்வது உறுதி: கோவையில் சு.சுவாமி பேட்டி
கோவை: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறை செல்வது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோவையில் இன்று அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார்.
கோவையில் இன்று சமஸ்கிருத மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை துவக்கி வைக்க, கோவைக்கு, விமானம் மூலம் வந்தார் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க நிர்வாகியுமான சுப்ரமணியன் சுவாமி.

அப்போது நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே மிக மோசமான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை கிடையாது. தமிழகத்தில், ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டுவர வேண்டும்.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும். ஜெயலலிதா, சிறைக்கு செல்வது உறுதி.
பிரதமர் மோடி வெளிநாடு செல்வது குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது. வெளிநாடு செல்வது பிரதமரின் பணி. அதேநேரம், கறுப்பு பண மீட்பு விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் சரிவர செயல்படவில்லை.
எனவே, கருப்பு பணத்தை மீட்பது குறித்து பிரதமருக்கு 6 வழிமுறைகள் அடங்கிய கடிதம் அனுப்பியுள்ளேன்.

பீகாரில் தேர்தல் முடிந்த பிறகே, பாஜக செயற்குழு கூடி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும். பருப்பு விலை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது உண்மையிலேயே ஆச்சரியம் தருகிறது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications