சென்னையில் குடியரசு தின கொண்டாட்டம் - ரோசய்யா கொடியேற்றினார்- ஜெ. பங்கேற்பு
சென்னை: தமிழகத்திலும் இன்று குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் நடந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் அலங்கார ரத ஊர்வலத்தை ஆளுநர் ரோசய்யா மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் பார்வையிட்டனர்.
மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே நடந்த கொடியேற்று விழாவில் ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தேசிய கொடி ஏற்றப்பட்டதை அடுத்து முப்படையினர் அணிவகுப்பு நடைபெற்றது.பல்வேறு படையினரின் அணி வகுப்பை ஆளுநர் ரோசய்யாவும் , முதல்வர் ஜெயலலிதாவும் உற்சாகமாக கண்டு களித்தனர்.

பின்னர் பல்வேறு அலங்கார ரதங்களின் அணிவகுப்பும், மாணவ, மாணவியர், பல்துறையினர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.
காவல்துறை அதிகாரிகள் 25 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்
இதற்கிடையே, தமிழக கூடுதல் டிஜிபிக்கள் சஞ்சய் அரோரா, சுனில் குமார், ஐஜி முகம்மது ஷகீல் அக்தர் உள்பட தமிழக காவல்துறை அதிகாரிகள் 25 பேர் இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2012-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாசேத்தி உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதனை சமூக விரோத கும்பல் கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்தது. அவரது உயிர்த் தியாகத்தைப் போற்றும் வகையில் காவல்துறையில் மிக உயரிய பதக்கமாகக் கருதப்படும் "தீரச் செயல் பதக்கம்' ஆல்வின் சுதனின் குடும்பத்தாருக்கு வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications