புதுக்கோட்டை அருகே விபத்து.. தப்பியது தமிழக ஆளுநரின் கார்!
புதுக்கோட்டை அருகே ஆளுநரின் வாகனம் மீது அரசுப் பேருந்து உரசியது. அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து கார் தப்பியது.
புதுக்கோட்டை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா திட்டம் பற்றி ஆய்வு செய்ய இன்று புதுக்கோட்டை சென்றார். நிகழ்ச்சி முடிந்து புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு செல்லும்போது ஆளுநர் வாகனத்தின் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து லேசாக உரசியதால் பாதுகாப்புக்கு சென்ற போலீஸார் அச்சமடைந்தனர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நேரவிருந்த விபத்திலிருந்து ஆளுநரின் வாகனம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூய்மை இந்தியா திட்டம் பற்றி ஆய்வு நடத்த புதுக்கோட்டை மாவட்டத்துக்குச் சென்றார். ஆளுநர் ஆய்வு செய்ய புதுக்கோட்டை வருவதற்கு திமுகவினர் ஆயிரம் பேருக்கும் மேல் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டினர். அதனால், புதுக்கோட்டை பரபரப்பாக காணப்பட்டது.

தமிழக ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டைக்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுக்கோட்டையில் தூய்மை இந்தியா திட்டம் பற்றி பேசினார். மக்கள் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். ஆளுநர் நிகழ்ச்சி முடிந்த பின்னர், புதுக்கொட்டையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் போலீஸாரின் பாதுகாப்புடன் புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரின் வாகனம் புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, தேவகோட்டையிலிருந்து புதுக்கோட்டைக்கு சேன்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்திசையில் வந்தது. எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து ஆளுநர் வாகனத்தின் மீது லேசாக உரசியது. இதைப் பார்த்த ஆளுநருக்கு பாதுகாப்புக்கு சென்ற போலீஸார் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஆளுநர் வாகனத்தின் ஓட்டுநர் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக ஆளுநர் வாகன் நேரவிருந்த விபத்திலிருந்து தப்பியது. இதில் ஆளுநருக்கோ அவருடைய வாகனத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை.
இதையடுத்து, அந்த அரசுப் பேருந்து புறப்பட்டு சென்றது. ஆளுநர் வாகனமும் திருச்சி புறப்பட்டு சென்றது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications