ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை... அதிகரிக்கும் பரபரப்பு - வீடியோ
மும்பையில் இருந்து இன்று சென்னைக்கு வரும் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் நிலவி வருகிறது.
சென்னை: தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன்பிறகு தமிழக அர்சியலில் தினம்தோறும் வகைவகையான் காட்சிகல் அரங்கேறி வருகின்றன.

ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக அதிமுக அம்மா, அதிமுக புரட்சி தலைவி அம்மா என இரு அணிகளாகப் பிரிந்தன. அதனையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னும் இழுபறியாகக் கிடந்த அணிகள் இணைப்பு, கடந்த மாதம் 21ஆம் தேதி ஒன்றானது.
இந்த இணப்பு தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் புயலைக் கிளப்பியது. அதனையடுத்து அவர்கள் ஆளுநர் வித்யசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
அதிமுகவின் உள்கட்சிக்குள் பூசல் நிலவி வந்த நிலையில், எதிர்க்கட்சியான் அதிமுகவும் கடந்த மாதம் 27ஆம் தேதி ஆளுநரை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
ஆனால், ஆளுநர் இதுவரை இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் அனைவரும் உள்ளனர். மேலும், இதே கோரிக்கைகளுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பும், திமுகவும் வழக்குத் தொடர்ந்தன.
எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல்முனை தாக்குதல்கள் நடந்து வரும் சூழ்நிலையில், பொறுப்பு ஆளுநர் மும்பையில் இருந்து சென்னை வருகிறார். தற்போது தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் நிலவி வருகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications