மதுரையில் மாயமான அரசு பஸ்... சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு
மதுரை: மதுரையில் அரசு பேருந்தை மர்மநபர் ஒருவர் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மாயமான பேருந்து சிவகங்கை அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து மதுரை வந்த அரசு பேருந்து (டி.என் 67 என் 0680 ) நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தடைந்தது.

காலை 5.30 மணிக்கு மீண்டும் செங்கோட்டை செல்லவிருந்த பேருந்தை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி சென்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அதிகாலையில் வந்து பார்த்த போது அந்த பேருந்து, நிறுத்தப்பட்ட இடத்தில் இல்லை.
இதனையடுத்து பேருந்து நிலையம் முழுவதும் தேடியதில் பேருந்து மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மனநலம் பாதிக்கப்பட்ட யாரேனும் பேருந்தை திருடிச் சென்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மாயமான பேருந்தை தேடும் பணி மதுரை மாவட்டம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டது. இதனிடையே மதுரையில் மாயமான பேருந்து சிவங்கை அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications