அட, கடைசியில் கவர்ன்மென்ட் பஸ்ஸிலும் கரண்ட் போச்சே... !
புதுக்கோட்டை: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மின் வெட்டுப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் அரசுப் பேருந்திலும் மின்சாரம் இல்லாமல் ஹெட்லைட் எரியாமல் போனதால் பஸ்ஸை ஓட்ட முடியாமல் நிறுத்தி விட்டனர்.
இதனால் பயணிகள் நடந்து போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் அரசுப் பேருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு முகப்பு விளக்குகள் மற்றும் உள்விளக்குகள் எரியாமல் கீரமங்கலம் பேருந்து நிலையம் வந்தது.
என்னடா இது இருட்டில் ஒரு பஸ் ஆடி அசைந்து வருகிறது என்று பஸ் நிலையத்தில் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்தப் பேருந்து அதற்கு மேல் போகவில்லை. நிறுத்தப்பட்டு வி்ட்டது.
இதனால் மேற்பனைக்காடு வரை செல்ல வேண்டிய பயணிகள் கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். அதன் பிறகு மேற்பனைக்காடு பகுதிக்கு வேறு பஸ் வசதியும் இல்லை. அதனால் பலர் நடந்து சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,த புதுக்கோட்டையில் இருந்து வரும் போது டைனமோ வேலை செய்யாமல் நடுவழியில் முகப்பு விளக்குகள் மற்றும் உள் விளக்குகள் நின்றுவிட்டது. அதனால் மேற்பனைக்காடு வரை செல்ல வேண்டிய பயணிகள் செல்ல முடியவில்லை என்றனர்.
வீடுகள் தோறும், தொழிற்சாலைகள் தோறும் அலங்கரித்து வரும் மின்வெட்டு அரசுப் பஸ்ஸுக்குள்ளும் புகுந்து விட்டதோ என்று மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications