டெண்டர் எடுப்பதில் தகராறு- கவுன்சிலர், அரசு கான்ட்ராக்டர் மோதல்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் டெண்டர் எடுப்பதில் தகராறு ஏற்பட்டதால் கவுன்சிலர் கன்னத்தில் பளார் விட்டார் அரசு காண்டராக்டர். அவரும் திருப்பி தாக்கியதால் டெண்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பஞ்சாயத்து பகுதியில் வளர்ச்சி பணிகளான தார்சாலை, சிமிண்ட் சாலை, கழிவுநீர் வடிகால் வசதி, சாலை சீரமைப்பு, குடிநீர் குழாய்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது.
கோவில்பட்டி அருகே இளம்புவனத்தை சேர்ந்த மந்திரம் மகன் பேச்சியப்பன் என்பவர் ரூ.6 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கு சங்கரன்கோவிலை சேர்ந்த அரசு ஓப்பந்தக்காரர் நிஷார் மூலம் டெண்டர் கோரினார்.
பேச்சியப்பன் ஓன்றிய கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அங்கிருந்த கோவில்பட்டியை சேர்ந்த அரசு ஓப்பந்தக்காரர் அமிர்தராஜ் இந்த பணிக்குரிய டெண்டரை தான் எடுக்கப்போவதாக பேச்சியப்பனிடம் தெரிவித்தார்.
இதற்கு பேச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அமீர்தராஜ், பேச்சியப்பன் கன்னத்தில் அறைந்தார். இதனால் வெகுண்ட பேச்சியப்பன் திரும்பி அவரது கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவத்தால் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.
இதுகுறிதது கோவில்பட்டி கிழக்கு பகுதி காவல் நிலையத்தில் பேச்சியப்பன் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன், அமிர்தராஜ் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். டெண்டர் அலுவலகத்தில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அடித்து கொண்ட சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications