தமிழகத்தில் நடப்பது ஆட்சியே இல்லை.. உடனடியாக கலைக்க வேண்டும்... தீபா ஆவேசம்!
தமிழகத்தில் ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடப்பது ஆட்சியே இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று திடீரென போயஸ் கார்டனுக்கு வருகை தந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் போயஸ்கார்டனில் திரண்டு போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர். போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

தன்னை தாக்கிய தீபக்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, தீபக் அழைத்ததால் தான் வந்ததாக கூறினார். ஆனால் வரவழைத்து தீபக் குண்டர்களுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார்.

பணத்துக்காக கொன்றான்
சசிகலா கும்பலோடு சேர்ந்து தீபக் தனது அத்தை ஜெயலலிதாவை பணத்துக்காக கொன்றதாகவும் அவர் கூறினார். மேலும் தன்னை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வசை மாரி பொழிந்த தீபா
மேலும் தீபக்கை மனுஷனே இல்லை, புறம்போக்கு என்றெல்லாம் தீபா வசை மாரி பொழிந்தார். இதுகுறித்து பிரதமரிடம் புகார் அளிப்பேன் என்றும் அவர் கூறினார்.

ஆட்சியை கலைக்க வேண்டும்
தமிழகத்தில் நடப்பது ஆட்சியே இல்லை. இந்த ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் சசிகலாவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றும் தீபா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications