"முதலமைச்சர்".. இவ்வளவுதான் ஓ.பன்னீர் செல்வத்திற்குக் கிடைத்துள்ள மரியாதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் என்ற பதவிக்குரிய முழுமையான அந்தஸ்தும், கெளரவமும், ஓ.பன்னீர் செல்வத்திற்குக் கிடைத்தது போலத் தெரியவில்லை. அவரை முதல்வராக தமிழக அரசு கருதுவது போலவும் தெரியவில்லை.

அவரது பெயரைக் கூட போடாமல் வெறும் முதல்வர், முதலமைச்சர் என்று மட்டுமே போட்டு அரசு அறிக்கைகள், அறிவிப்புகள் வெளியாவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பெயருக்கு முன்பு ஏகப்பட்ட அலங்கார வார்த்தைகள் இருக்கும். ஆனால் பன்னீர் செல்வத்துக்கோ, அவரது பெயரைக் கூட போடமல் அறிக்கைகளை அரசு வெளியிட்டு வருகிறது.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா....!

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா....!

வழக்கமாக அதிமுகவினர் ஜெயலலிதா பெயரைச் சொல்வதே இல்லை. அதற்கு மாறாக மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா என்றுதான் நீட்டி முழங்குவார்கள்.

முதல்வராக ஜெ. இருந்தபோது

முதல்வராக ஜெ. இருந்தபோது

அதேபோல ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிகாரிகள், மாண்புமிகு முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா என்று நீட்டாக சொல்வார்கள். அறிக்கையிலும் இந்த ஆர்டர் தெளிவாக இருக்கும்.

வெறும் முதல்வர்தான்

வெறும் முதல்வர்தான்

ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தின் நிலை அப்படி இல்லை. மாறாக, அவரது பெயரைக் கூடக் குறிப்பிடாமல் முதலமைச்சர் அறிவிப்பு, முதலமைச்சர் அறிக்கை, முதலமைச்சர் வாழ்த்து என்று மட்டும்தான் மொட்டையாக சொல்கிறார்கள் அரசு அதிகாரிகள்.

ஓ.பன்னீர் செல்வம்னு சொன்னா குறைஞ்சா போய்டும்

ஓ.பன்னீர் செல்வம்னு சொன்னா குறைஞ்சா போய்டும்

அவரது பெயரை ஓ.பன்னீர் செல்வம் என்று சொல்வதேயே அறிக்கைகளில் தவிர்க்கிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை.

அவர் சொல்லிக் கேட்கிறார்களோ

அவர் சொல்லிக் கேட்கிறார்களோ

ஒருவேளை அறிக்கை இப்படி இருந்தால் போதும் என்று ஓ.பன்னீர் செல்வமே கூறியிருக்கிறாரா என்று தெரியவில்லை.

பெயர்ப் பலகை கூட மாறலை

பெயர்ப் பலகை கூட மாறலை

அதேபோல முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர்ப் பலகை கூட தலைமைச் செயலகத்தில் இல்லை என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. பன்னீர் செல்வத்தின் அரசு வீட்டிலும் கூட அப்படி பெயர்ப் பலகை மாட்டவில்லை என்கிறார்கள்.

பெயர்ப் பலகை கூட மாறலை

பெயர்ப் பலகை கூட மாறலை

ஜெயலலிதா சிறைக்குப் போனதற்குப் பின்னர் அவரை முதலமைச்சர் என்று கூப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் ஜெயா டிவியில் அதிரடியாக அவரை மக்கள் முதல்வர் என்று கூப்பிட ஆரம்பித்து இன்று வரை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள்.

அப்ப ஓ.பி.எஸ். யாருக்கு முதல்வர்...

அப்ப ஓ.பி.எஸ். யாருக்கு முதல்வர்...

அப்படியென்றால் ஓ.பன்னீர் செல்வம் செவ்வாய் கிரகவாசிகளுக்கு முதல்வரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+