வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து நகை பறிக்க முயற்சி.. பட்டதாரி வாலிபர், பெண் இன்ஜினியர் கைது
நூதன முறையில் திருட்டில் ஈடுபட முயன்ற பட்டதாரி வாலிபரும், பெண் இன்ஜினியரும் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்: வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து நகையை பறிக்க முயன்ற பெண் இன்ஜினியரும், எம்பிஏ பட்டதாரி வாலிபரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.
ஆந்திர மாநிலம் இந்துப்பூரை சேர்ந்தவர் சுவேதா (24). இவரும் ஓசூர் அருகே பாகலூரைச் சேர்ந்த எதிஷ் (23) என்பவரும் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுவேதா இன்ஜினியரிங் முடித்துள்ளார். எதிஷ் இன்ஜினியரிங் பட்டதாரி.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (48). தனியார் கல்லூரி யில் அலுவலராக பணியாற்றுகிறார். இவரது மனைவி லட்சுமி (45), நேற்று முன்தினம் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சுவேதாவும், எதிஷும் லட்சுமியிடம், வீடு வாடகைக்கு விடுவதாக போடு மாட்டியுள்ளீர்கள் என பேச்சு கொடுத்துள்ளனர்.
மேலும், அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். சமையல் அறைக்குள் தண்ணீர் எடுக்க லட்சுமி சென்ற போது, பின்தொடர்ந்து சென்ற இருவரும் லட்சுமியின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத லட்சுமி, அவர்களிடம் இருந்து போராடி விடுபட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்து சத்தம் போட்டார். இதையறிந்த அருகில் இருந்தவர்கள் உடனே சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் 2 பேரையும் ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். வீடு வாடகைக்கு கேட்பது போல் நகை கொள்ளையடி முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications