"யூத்"தெல்லாம் ஒத்திப் போ.. "ப்யூட்டிபுல் பாட்டி"ங்க வர்றாங்க தெரியலை...!
சென்னை: இது யூத்துங்க காலம்.. அப்படியெல்லாம் அடிச்சுப் பேச முடியாது பாஸ்.. வயதானவர்களும் இப்போது யூத்துகளுக்கு நிகராக கலக்க ஆரம்பித்துள்ளனர்.
எதில் எப்படியோ விளம்பரங்களில் பல பழைய பாட்டிகளை அதிகம் பார்க்க முடிகிறது. சும்மா க்யூட்டாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பாட்டிகள்.
பாட்டிகள் என்று இவர்களிடம் போய்ச் சொன்னால் குமட்டிலேயே குத்துகிறார்கள்.. !

சச்சுப் பாட்டி
சமீபத்தில் பழம்பெரும் நடிகை சச்சு ஒரு ஆன்லைன் விற்பனை தளத்தின் விளம்பரத்தில் அசத்தினார். அவரும் ரேவதி சங்கரனும் நடித்திருந்த இதில் நடிகர் சதீஷும் இடம் பெற்றிருந்தார்.

ஆண்டிடா
அதில் கடைசியாக தேங்க்யூ பாட்டி என்பார் சதீ்ஷ்.. அதற்கு சதீஷின் குமட்டில் குத்தி ஆண்டிடா என்று கூறுவார் சச்சு.. செம விளம்பரம். வந்த வேகத்தில் இது ஹிட்டடித்தது.

காபியிலும் அசத்தினார்
சச்சு முன்பு நரசுஸ் காபி விளம்பரத்திலும் வந்து அசத்தியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இந்த ஆன்லைன் விற்பனை விளம்பம் சீக்கிரமே ஹிட்டானது. 2 வெர்சனும் வந்து போய் விட்டது.

மிக்ஸி பாட்டி
அடுத்து மிக்ஸி பாட்டி. ஒரு மிக்ஸி விளம்பரத்தில் வரும் இந்தப் பாட்டியைப் பார்த்து வாவ் போடாதவர்களே இருக்க முடியாது. காரணம், பாட்டியின் அசத்தல் முக பாவனை.

நோ நான்சென்ஸ் பாட்டி
பாட்டியும், பேத்தியும் பேசுவார்கள். மிக்ஸி பற்றி பேத்தி பேசப் பேச பாட்டி சந்தேகம் கேட்டுக் கொண்டே வருவார். கடைசியில் சமையலை முடித்து குவித்து வைத்திருப்பார். பேத்தி ஆச்சரியத்துடன் பாட்டியைப் பார்க்கும்போது சிரிப்பார் பாருங்கள் ஒரு சிரிப்பு.. சூப்பர்ப்.

இது மைக்கேல் ஜாக்சன் பாட்டி
இது இன்னொரு பாட்டியின் கதை. இது ஒரு காபி விளம்பரம். இதில் வரும் பாட்டி அல்ட்ரா மாடர்ன் பாட்டி. குட்டையாக இருந்தாலும் ஜாக்சன் ரேஞ்சுக்கு டான்ஸ் ஆட விட்டுள்ளனர்.

க்யூட் பாட்டி!
பார்க்கவே படு சிரிப்பாக மட்டுமல்லாமல், பாட்டியின் தாவாங்கட்டையைப் பிடித்துக் கொஞ்ச வேண்டும் போலவும் இருக்கும். அவ்ளோ சூப்பராக வந்து போகிறார் இந்தப் பாட்டி.
மணிரத்தினம் பாட்டிகளை வைத்து பர்ஸ்ட் நைட் பாட்டு எடுத்தார்.. ஆனால் வியாபாரிகளோ, க்யூட் பாட்டிகளை வைத்து கலக்கல் விளம்பரங்களை கொடுத்துக் கலக்குகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications