குரூப் 2 தேர்வு முடிவுகள்- 15 நாட்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: குரூப் 2 தேர்விற்கான முடிவுகளானது இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இதுகுறித்து இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், "கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "குரூப் 2" தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும். இதேபோன்று வி.ஏ.ஒ தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியாகும். குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து இன்னும் 1 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும்.
உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு 162 இடம் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப அக்டோபர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 21 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும், விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஏதாவது தகவல் தெரிந்தால் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications