குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - ஆன்லைனில் நவம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம்!
சென்னை: தமிழகத்தில் குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 18 ஆம் தேதி என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை (403), மருத்துவம், கிராம சுகாதாரப் பணிகள் (213), பதிவுத் துறை (59), வணிக வரித் துறை (191), சுகாதாரத் துறை (136), பள்ளிக் கல்வி இயக்ககம் (76), தலைமைச் செயலக நிதித் துறை (26), தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (62), மீன்வளத் துறை (45), போக்குவரத்துத் துறை (35) உள்ளிட்ட துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள், கூட்டுறவுத் துறையில் உள்ள இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (308) பணியிடங்கள் என மொத்தம் 1,863 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை அக்டோபர் 12 இல் வெளியிட்டது.
இந்தத் தேர்வுக்கு இணையதளம் www.tnpsc.gov.in வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 11 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கிக் கிளைகள் மூலமாக உரிய விண்ணப்ப மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திட கடைசி நாள் நவம்பர் 20 ஆம் தேதி ஆகும்.
இதுதொடர்பான சந்தேகங்களுக்கு contacttnpssc@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications