குரூப் 4 தேர்விற்கான ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
குரூப் - 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தி்ல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஆணையம் நடத்தும் குரூப் - 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் இணையதளத்தி்ல் வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு நவ.,6 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியுள்ளன.

இந்த ஹால்டிக்கெட்டை தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டி.என்.பி.எஸ்.சி., இணையதளங்களான www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதாவர்கள் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு பணம் கட்டிய ரசீதுடன் அக்.,31 தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications