ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவிற்கு வரி விதிப்பதா? - கமல்ஹாசன்
ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவிற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: சினிமா என்பது சூதாட்டம் அல்ல.. அது ஒரு கலை. ஹாலிவுட் படங்களுக்கு நிகராக 28 சதவிகிதம் வரி விதிப்பது தேவையற்றது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்தி சினிமாவையும், தமிழ் சினிமாவையும் ஒரே அளவுகோலில் பார்க்கக்கூடாது என்றும் அவர் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு முழுக்க ஒரே மாதிரி வரி விதிப்பான ஜிஎஸ்டி ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. சினிமாவிற்கு 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும், என்ன தலைப்பாக இருந்தாலும், ஒரே மாதிரி 28 சதவீதம் வரி விதிக்கப்படும்.
இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சூதாட்டமும், சினிமாவும் ஒன்றல்ல வேறு வேறு. திரைப்படம் ஒரு கலை என்று கூறினார்.
தேச ஒற்றுமையை வரவேற்கிறோம் அதே நேரத்தில் தமிழ் சினிமாவை இந்தி சினிமாவுடன் ஒப்பிட முடியாது. சினிமாவை தவறாகும், சரியாகவும் பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் உள்ளனர். பிறந்தது முதல் சினிமாவில்தான் இருக்கிறேன். எனக்கு சினிமாதான் வாழ்க்கை. நான் பேசக்கற்றுக்கொண்டதே சினிமாவில்தான்.
திரை துறையினரை நம்பி ஏராளமானோர் உள்ளனர். ஜிஎஸ்டி வரியோடு நாங்கள் வருமான வரியும் கட்டவேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு விவகாரம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications