குஜராத் தலித்கள் மீது தாக்குதல், மாயாவதி மீதான விமர்சனம்- 25-ல் வி. சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை: குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் மாயாவதி இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் ஜூலை 25-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்:
குஜராத் மாநிலத்தில் செத்த மாடு ஒன்றின் தோலை அகற்றியதாகச் சொல்லி பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் இந்து மதவெறியர்கள், நான்கு தலித்துகளை உணா என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் படுபயங்கரமாகத் தாக்கியுள்ளனர். அதையொட்டி குஜராத் மாநிலம் முழுவதும் தலித் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர்.

தலித்துகள் பலர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் எதிரொலித்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குஜராத் தாக்குதலைக் கண்டித்து மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்தப் போராட்டங்களின் விளைவாக குஜராத் மாநிலத்தில் தலித்துகளைத் தாக்கியவர்கள் எனச் சிலரைக் கைது செய்தும் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்தும் குஜராத் மாநில பா.ஜ.க. அரசு கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது.
தலித்துகளைத் தாக்கியவர்கள் அனைவரையும் அதேபோன்று பொது இடத்தில் நிறுத்தி தண்டிக்கும்வரை ஓயமாட்டோம் என குஜராத் தலித் மக்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுடைய போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் வேறு பல பெயர்களிலும் செயல்படும் இந்து மதவெறி அமைப்புகள் அனைத்தையும் தடைசெய்ய வேண்டுமென்றும் அவற்றை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்க வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
குஜராத் தாக்குதலைக் கண்டித்ததற்காக செல்வி மாயாவதி அவர்களை உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் சொல்ல நாக்கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ளார். அவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
குஜராத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தலித் மக்கள் மீதான சாதி, மதவெறி தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு சாதிவெறி மதவெறி அமைப்புகள் ஊக்கம் பெற்று இந்தத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் செங்கத்தில் தலித் குடும்பத்தினரை நடுரோட்டில் மிருகத்தனமாக போலீசார் தாக்கிய கொடுமை நடந்துள்ளது. ஆணவக் கொலைகளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் செல்வி மாயாவதி இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்தும் எனது தலைமையில் எதிர்வரும் ஜூலை 25-ந் தேதி சென்னையில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications