சென்னையில் பயங்கரம்.... குஜராத் மின் நிறுவன அதிகாரி படுகொலை.. 2 பேர் கும்பல் வெறிச்செயல்
சென்னை: சென்னையில் வசித்து வந்த குஜராத்தைச் சேர்ந்த மின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் நேற்று இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது பெயர் வெங்கடேஸ்வரலு. 51 வயதான அவர் ஒரு மின் பகிர்மான நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்து வந்தார். நேற்றிரவு 9.30 மணியளவில் மருந்தகத்தில் மருந்து வாங்க வந்த அவரை கண நேரத்தில் குமரன் காலனியில் வைத்து தாக்கியுள்ளனர் மர்ம நபர்கள் 2 பேர்.

அவருக்காக காரில் காத்துக் கொண்டிருந்த டிரைவர் ஆறுமுகம் வெகு நேரமாகியும் வெங்கடேஸ்வரலு திரும்பி வராத காரணத்தினால் சென்று பார்த்து வெங்கடேஸ்வரலு தாக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மருந்துகளை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தபோது, பைக்கில் வந்த இரண்டு பேர் வெங்கடேஸ்வரலு தலையில் பலமாக தாக்கியுள்ளனர். அதனால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வெங்கடேஸ்வரலுக்கு மனைவி சுசித்ரா, சோனு சின்னு என்னும் பொறியியல் படிக்கும் மகனும், சாய் கிருஷ்ணா என்னும் 11 வகுப்பு மாணவனான மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications