கரூரில் வாழைத்தோப்பில் சிக்கிய துப்பாக்கி டெலஸ்கோப்
கரூர்: கரூர் அருகே ஒரு வாழைத்தோப்பில் துப்பாக்கியில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய டெலஸ்கோப், லென்ஸ், அதை பயன்படுத்துவது தொடர்பான குறிப்புகள் அடங்கிய கைடு ஆகியவை அடங்கிய ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கரூர் அருகே, குளித்தலையில் உள்ள ரயில்வே நிலையத்தில் அருகில் உள்ள வாழைத்தோப்பில் ராணுவப் பாதுகாப்பு படை அல்லது துப்பாக்கி தொழிற்சாலையில் பயன்படுத்தக்கூடிய டெலஸ்கோப் மற்றும் அதை துப்பாக்கியில் எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான கைடு புத்தகங்கள் அடங்கிய 13 பெட்டிகள் அடங்கிய ஒரு மிகப்பெரிய பெட்டி இன்று காலை இருந்ததை அப்பகுதி மக்கள் வயலுக்கு சென்ற போது பார்த்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செந்தில் மற்றும் பிரகாஸ்குமார் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அப்பெட்டியை மீட்டனர்.

பெட்டியின் மேல் பகுதியில் இந்தியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பெட்டியை ரயில்வே போலீஸார் கைப்பற்றி ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் எஸ்.பி.ஜோஸி நிர்மல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications