அதிமுகவின் பிரசார 'பீரங்கி'யின் பலம் கூடியது.. கட்சியில் சேர்ந்தார் 'குண்டு' ஆர்த்தி!
சென்னை: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் நடிகை குண்டு ஆர்த்தி அதிமுகவில் இணைந்தார்.
ஏற்கனவே பல காமெடி நடிகர்கள், நடிகைகள், குணச்சித்திர நடிக நடிகையர், வில்லன் நடிகர்கள், ஹீரோ, ஹீரோயின்கள் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது புதிய வரவாக குண்டு ஆர்த்தியும் அதிமுகவுக்கு வந்துள்ளார்.
முதல்வர் முன்னிலையில் ஆர்த்தி தற்போது அதிமுகவில் இணைந்து அடிப்படை உறுப்பினராக சேர்ந்துள்ளார்.

சிங்கமுத்து- செந்தில்
அதிமுகவில் ஏற்கனவே சிங்கமுத்து, செந்தில் போன்ற காமெடியன்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.

ஊர் ஊராகப் பிரசாரம்
இவர்கள் ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்து முழங்கி வருகிறார்கள்.

பொன்னம்பலம் - விந்தியா
இதேபோல வில்லன் நடிகர் பொன்னம்பலம், முன்னாள் நாயகி விந்தியா உள்ளிட்டோரும் வீதி வீதியாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

மறுபக்கம் ராமராஜன்
அதேபோல முன்னாள் ஹீரோவும், முன்பு ஒருமுறை அதிமுகவின் எம்.பியாக இருந்தவருமான ராமராஜனும் ஊர் ஊராகப் போய் கலர்கலராகப் பேசி வருகிறார்.

அதிமுகவுக்கு வந்த ஆர்த்தி
இந்த நிலையில் பிரபலமான டிவி நடிகையும், சினிமா காமெடி நடிகையுமான ஆர்த்தியும் அதிமுகவுக்கு வந்துள்ளார்.

பிரசாரத்தில் குதிப்பாரா
பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் ஆர்த்தி. டிவி நடிகரும், சினிமா நடிகருமான கணேஷ்கரை மணந்து இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவில் இணைந்துள்ள ஆர்த்தி பிரசாரத்திலும் குதிப்பார் என்று தெரிகிறது.

பீரங்கிகளின் பலம் உயர்ந்தது
குண்டு ஆர்த்திக்கு நல்ல மவுசு தமிழக மக்களிடம் இருப்பதால் அதிமுகவின் பிரசார பீரங்கிகளின் பலம் சற்றே கூடியுள்ளதாக கருதலாம்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications