குரு பெயர்ச்சி விழா: பாடி திருவலிதாயம் ஆலயத்தில் குரு பகவானுக்கு லட்சார்ச்சனை
சென்னை: குருபெயர்ச்சியை முன்னிட்டு சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை விழா 3 நாட்கள் நடைபெற உள்ளது . ஆகஸ்ட் 01 முதல் 3ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி ஆகஸ்ட் 02ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி எனும் தேவ குருவாகிய வியாழ பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார். 01.09.2017 வரை கன்னி ராசியில் இருப்பார் குருபகவான். இந்த குருபெயர்ச்சிக்கு மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகள் குரு பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டிய ராசிகள் ஆகும்.

சென்னை பாடியில் உள்ள அருள்மிகு திருவல்லீஸ்வரர் (திருவலிதாயம்) கோவில் உள்ளது. இந்த கோவில் குரு பகவானுக்கு மிகவும் விசேஷமானது. சென்னையில் குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ள கோவில் இது மட்டுமே. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த குருபெயர்ச்சியை முன்னிட்டு லூகாஸ் திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை விழா 3 நாட்கள் நடைபெற உள்ளது. 01.08.2016 (திங்கள்), 02.08.2016 (செவ்வாய்), 03.08.2016 (புதன்) ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.
02.08.2016 (செவ்வாய்) குருபெயர்ச்சி அன்று மட்டும் குரு பரிகார ஹோமம் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. சாந்தி பரிகாரம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-26540706 இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யோக தட்சிணாமூர்த்தி
திருவள்ளூரை அடுத்த பூங்கா நகரிலுள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி கோயிலில் ஆகஸ்ட் 2ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. யோக ஞான தட்சிணாமூர்த்தி கோயிலில் அன்று காலை 6 மணிக்கு லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், அஸ்திர ஹோமம் நடைபெறும். காலை 8 மணிக்கு பால் குட அபிஷேகம், தொடர்ந்து காலை 9.27 மணிக்கு மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
-
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications