குரு பெயர்ச்சி: ஸ்டாலினுக்கு ஜென்ம குரு… ஜி.கே.வாசனுக்கு வெற்றிக்கனி, ராகுலுக்கு எச்சரிச்கை!
சென்னை: குரு பெயர்ச்சி நமக்கு நன்மை தருமா? தீமை தருமா? இந்த குரு பெயர்ச்சி நமக்கு நல்லது தரணும் என்று இப்போதே லட்சார்ச்சணை செய்ய ஆரம்பித்து விட்டனர். சிம்ம ராசிக்கு ஜென்ம குரு என்பதால் சிம்ம ராசிக்காரர்கள் எல்லாம் சிறப்பு பூஜைகள் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
குருபகவான் ஜூலை 5ம் தேதி இரவு ஆயில்யம் நட்சத்திரம், நான்காம் பாதம், கடக ராசியில் இருந்து, மகம் நட்சத்திரம் முதல் பாதம் சிம்ம ராசிக்கு, பெயர்ச்சி ஆகிறார்.
இந்த குரு பெயர்ச்சி, அரசியல் தலைவர்களுக்கு, எத்தகைய பலன்களை அளிக்கும் என்றும் என்று ஜோதிடர்கள் கணித்து கூறி வருகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் படியுங்களேன்.

ஸ்டாலினுக்கு ஜென்ம குரு
திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம், இவரது ஜென்ம ராசியில், குரு சஞ்சரிக்கப் போகிறார். இப்போதுள்ள நிலையில், தடுமாற்றத்தை ஏற்படுத்துவாராம்.

கடின உழைப்பு அவசியம்
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிகமாக உழைக்க வேண்டி வரும். ஆனாலும் எதிர்பார்த்த வெற்றியை, பெற முடியாமல் போகுமாம்.

அரசியலில் புது அத்தியாயம்
ஸ்டாலினின் ஜனன கால தசாபுத்திகள், இவருக்கு சாதகமாக உள்ளது. இது இவரின் அரசியலில், புதியஅத்தியாயத்தை உருவாகும் என்கின்றனர்.

சனி, ராகு - கேது
தந்தை சொல்படி, இவரது நடவடிக்கைகள் அமைந்தால், எதிர்காலம் நன்றாக அமையுமாம். வரும் பொதுத் தேர்தல், இவருக்கு சற்று சவாலான விஷயமாக இருந்தாலும் சனி, ராகு, கேது பெயர்ச்சிகள், சாதகமான பலன்களைத் தருமாம்.

ஜி.கே.வாசனுக்கு வெற்றிக்கனி
தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம். ஜி.கே.வாசனுக்கு இதுவரை, 10ம் இடத்தில் இருந்த குரு பெயர்ச்சியாகி, 11ம் இடம் செல்ல உள்ளார். வெற்றிகள் குவியுமாம்.

கட்சிக்கு அங்கீகாரம்
இவருக்கு ஏழரை சனி விலகுவதாலும், குரு பெயர்ச்சி சாதகமாக இருப்பதாலும், அரசியலில் நல்ல வாய்ப்புகள் உண்டு; இவரது கட்சிக்கு, அங்கீகாரம் கிடைக்கும் என்கின்றனர்.

ராகுவினாலும் யோகம்
தமிழக அரசியலில் ஜி.கே.வாசனின் செல்வாக்கு அதிகரிக்கும்; தேர்தல் கூட்டணிக்காக, பிரபல கட்சிகள், இவரை நாடி வரும். இவரது கூட்டணி வெற்றி பெறும் என்கின்றனர். ஜனவரி, 8ம் தேதி முதல், ராகுபகவானும், 11ம் இடத்தில் அமர்வதால், இக்காலம் இவருக்கு யோக காலமாகவே இருக்கும்; எதிர்ப்புகளை இல்லாமல் செய்து, முன்னேற்றம் அடைவார்.

ராகுலுக்கு எச்சரிக்கை
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி மிதுனம் ராசியில் தற்சமயம் குரு மூன்றாம் இடம் செல்ல உள்ளார். இது, ஏற்ற இடம் அல்ல என்பதால்,எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.

பொறுமை அவசியம்
தொடர் தோல்விகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். தேசிய அளவில், பெரிய ஆதாயங்கள் எதுவும் இல்லை. பேசும்போது பொறுமையை கடைபிடித்தால், நல்ல பெயரும், புகழும் உண்டாகும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications