ஜெயங்கொண்டம், குன்னத்தில் பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக் கணிப்பு
சென்னை: ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் காடுவெட்டி குரு வெல்லும் வாய்ப்புள்ளதாகவும், அதேபோல் குன்னம் தொகுதியில் போட்டியிடும் வைத்திலிங்கம் வெற்றி பெறும் வாய்ப்புவுள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் காடுவெட்டி குரு. இந்நிலையில் இன்று வெளியான நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பில், ஜெயங்கொண்டத்தில் குரு வெல்லும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றது.
இங்கு அதிமுகவுக்கு 21.5 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம், திமுகவுக்கு 30.7 சதவீத ஆதரவு காணப்படுகிறது. தேமுதிகவுக்கு 5.0 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. பாமகவுக்கு 32.7 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகின்றது.
மேலும், அரியலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதியிலும் போட்டியிடும் வைத்திலிங்கம் வெல்லும் நிலை உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கு அதிமுகவுக்கு 23.9 சதவீத ஆதரவு காணப்படுகிறது. திமுகவுக்கு 27.6 சதவீதமும், தேமுதிக - ம.ந.கூட்டணிக்கு 9.4 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம் பாமகவுக்கு 34.2 சதவீத ஆதரவு காணப்படுகிறது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தோல்வி அடைவார் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய இரண்டு தொகுதியில் பாமக வெல்லும் வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications