குருமூர்த்தியை பார்த்தீங்களா.. "திமுக சண்ட.. உடையுது மண்ட".. ஒரே கிண்டல்தான்.. வீடியோ வேற..!
குருமூர்த்தி திமுகவை கிண்டலடித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
தென்காசி: பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்விக்கு எதிராக, திமுக கவுன்சிலர் கனிமொழி தகாத வார்த்தையில் திட்ட, நடுவில் சிக்கிகொண்டு சைக்கிள் கேப்பில் தப்பித்துள்ளார் இன்னொரு கவுன்சிலர் சாக்ரடீஸ்.. இதைதான் பாஜக ஆதரவாளரான குருமூர்த்தி ட்வீட் போட்டு விமர்சித்துள்ளார்.
நடந்தது என்ன?
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் அதன் தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது.. இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் உதயகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதுமே, முதல்வர் ஸ்டாலின் குறித்து மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியின் கணவர் இன்னொரு கட்சிக்காரரிடம் அவதூறாக பேசிய ஆடியோ என்று சொல்லி, ஒரு ஆடியோவை ஸ்பீக்கரில் திமுக கவுன்சிலர் கனிமொழி போட்டு காட்டினார்.

அவதூறு
மேலும் திமுகவில் இருந்து கொண்டே முதல்வரை இப்படி அவதூறாக பேசுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய கனிமொழி, தலைவி பதவியை தமிழ்செல்வி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கையை விடுத்தார்.. உடனே இதற்கு தமிழ்ச்செல்வி எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.. இது தமிழ்செல்வி - கனிமொழி இருவருக்கும் இடையே வாக்குவாதமாக வெடித்தது.. இதற்கு பதில் அளித்த பிறகுதான், கூட்டத்தையே நடத்த வேண்டும் என்று மற்ற கவுன்சிலர்களும், கனிமொழி, மாரிமுத்து ஆகியோரிடம் வலியுறுத்தினர்.

கனிமொழி வாதம்
அப்போது திமுக கவுன்சிலர் சாக்ரடீஸ் குறுக்கே புகுந்து, சமாதானம் செய்ய முயன்றார்.. மக்கள் திட்டம் சார்ந்த கேள்விகளை மட்டும் கேளுங்கள் என்று கனிமொழியிடம் சொன்னார்.. உடனே சாக்ரடீசுக்கு எதிராக கவுன்சிலர்களும், அவர்களுடன் அரங்கத்துக்குள் வந்திருந்த திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... தமிழ்ச்செல்வி எந்த ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கினாலும் அதில் முறைகேடு இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்...

கனிமொழி
ஒருகட்டத்தில் தமிழ்ச்செல்வியும், கனிமொழியும் ஒருவரையொருவர் ஒருமையில் பேசிக் கொண்டனர். இதனால் மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... இதற்கு மத்தியில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவு செய்யப்பட்டுவிட்டன என்றாலும், இந்த சண்டை காட்சி வீடியோவாக சோஷியல் மீடியாவில் பரவ ஆரம்பித்துவிட்டது.

குருமூர்த்தி
இந்த வீடியோவைதான் துக்ளக் ஆசிரியர் குரூமூர்த்தி தன்னுடைய ட்வீட்டில் எடுத்து பதிவிட்டுள்ளார்.. அத்துடன், #திமுக சண்ட.. உடையுது மண்ட.. என்று பதிவிட்டுள்ளார்.. அத்துடன் இந்த ட்வீட்டை முதல்வர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைமைக்கழகத்திற்கு டேக் செய்துள்ளார்.. இந்த வீடியோவை பார்த்து திமுக தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது.. கவுன்சிலர்களால் நாளுக்கு நாள் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டு வருவது, கட்சிக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications