குட்கா ஊழல்: அதிமுகவை இறுக்கும் மத்திய அரசு.. குழப்பத்தில் எடப்பாடி.. அடுத்து என்ன நடக்கும்?
குட்கா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது அமைச்சரவைக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை: குட்கா ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது அமைச்சரவைக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நேற்று முதல் நாள் தமிழக அரசை சிபிஐ ரெய்டு மொத்தமாக ஆட்டிப்படைத்து . தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. சிபிஐ அதிகாரிகள் 450 பேர் இதில் ஈடுபட்டார்கள்.
மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.

கண்டிப்பாக கைதுக்கு வாய்ப்பு
இந்த சிபிஐ ரெய்டு காரணமாக, அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இது வருமான வரிசோதனை கிடையாது, சிபிஐ சோதனை. அதனால், கண்டிப்பாக சிபிஐ இந்த வழக்கில் சிக்கி இருக்கும் எல்லோரையும் கைது செய்ய வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். விஜயபாஸ்கர் கைதாகும் பட்சத்தில் அவர் தொடங்கி டிஜிபி வரை எல்லோரும் பதவி விலக வேண்டிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஆட்சி கவிழ்ப்பு வரை செல்லும்
விஜயபாஸ்கர் கைதானாலோ, பதவி விலகினாலோ அவர் கட்சிக்குள் கிளர்ச்சி செய்ய வாய்ப்பு உள்ளது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆம், கட்சிக்குள் ஏற்கனவே ஜெயக்குமார் தரப்பும் மதுசூதனன் தரப்பும் மோதிக்கொண்டு இருக்கிறது. விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவர் கிளர்ச்சி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆட்சி கவிழும் நிலை வரை செல்லும் என்றும் கூறுகிறார்கள்.

பெரிய குழப்பத்தில் எடப்பாடி
18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு ஏற்கனவே அரசுக்கு எதிராக வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கட்சிக்குள் உள்ள எல்லா உறுப்பினர்களும் மிகவும் நட்புடன் இருக்க வேண்டும். ஆனால், தற்போது அதிமுகவில் அப்படிப்பட்ட நிலை நிகழவில்லை. இந்த சிபிஐ ரெய்டு அதை மேலும் கிளறிவிட்டு இருக்கிறது. இதனால் ஆட்சி கவிழும் பதட்டத்தில் பெரிய குழப்பத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தகவல் வருகிறது.

மத்திய அரசு என்ன திட்டம்
மத்திய அரசுக்கு பல விஷயங்களில் அதிமுக அரசு மீது கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக செய்யும் தவறுகளுக்கு எல்லாம் தங்களுத்தான் கெட்ட பெயர் வருகிறது என்று பாஜக தேசிய தலைமை கருதுவதாக தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே அதிமுகவை பாஜக இயக்குகிறதா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது இந்த தொடர் பிரச்சனைகளால் சிபிஐ ரெய்டு முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications